புரோஸ்டேட் (Prostate) புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை பெற்று வரும் ஜோ பைடன்

புரோஸ்டேட் புற்றுநோய் காரணமாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கதிர்வீச்சு மற்றும் ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கதிர்வீச்சு சிகிச்சை ஐந்து வாரங்கள் நீடிக்கும் என்று அவரது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மே மாதம் ஜனாதிபதி அலுவலகம், பைடனுக்கு எலும்புகளுக்கு பரவும் ஒரு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்தது.
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இது குறிப்பாக வயதானவர்களுக்கு பொதுவானது. 80 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சுமார் 80 சதவீதத்தினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கதிர்வீச்சு சிகிச்சை என்பது புற்றுநோய் செல்களை அழிக்கவும், கட்டிகளை சுருக்கவும், அறிகுறிகளைப் போக்கவும் உயர் ஆற்றல் கதிர்வீச்சைப் பயன்படுத்தும் ஒரு மருத்துவ முறையாகும்.