அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள ஜோ பைடன்
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கையாள்வதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் புதியதோர் அலுவலகத்தை அமைத்துள்ளார்.
அதனைத் துணையதிபர் கமலா ஹாரிஸ் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான துப்பாக்கிப் பாதுகாப்புச் சட்டங்களை அலுவலகம் இயற்றும் எனவும் புதிய அலுவலகத்துக்குக் குறிப்பிட்ட அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்காவில் துப்பாக்கியை ஆக்கபூர்வமாய்ப் பயன்படுத்தும் சூழல் எட்டப்படவில்லை. வெள்ளை மாளிகையால் துப்பாக்கிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் நிலைமையை மேம்படுத்த நாடாளுமன்றம் தகுந்த முடிவெடுக்கவேண்டும். இரண்டாம் தவணைக்குப் போட்டியிடும் பைடனின் தேர்தல் பிரசாரத்தில் துப்பாக்கி வன்முறை விவகாரம் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துப்பாக்கிக் கட்டுப்பாட்டை வரவேற்பவர்கள் அமெரிக்காவில் நாள்தோறும் 100க்கு மேற்பட்டோர் துப்பாக்கி வன்முறைக்கு உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.