இத்தாலியில் வேலை வாய்ப்புகள்? தொலைபேசி மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

இத்தாலியில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக நடித்து வேலை தேடுபவர்களை குறிவைத்து புதிய தொலைபேசி மோசடி ஒன்று நடந்து வருகின்றது.
இந்த மோசடியில் ஜெர்மனி உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோசடி செய்பவர்கள் இத்தாலிய எண்களில் இருந்து அழைத்து, பாதிக்கப்பட்டவரின் சுயவிவரக்கோவை அதாவது CVஐ பெற்றதாக தானியங்கி செய்தி மூலம் கூறுகின்றனர்.
இதனையடுத்து, வேலை தேடுபவரிடம் வட்ஸ்அப்பில் உரையாடலைத் தொடரச் சொல்கிறார்கள். இது ஆபத்தான ஒரு பொறியாகும். இந்த எண்களை வட்ஸ்அப்பில் சேர்க்க வேண்டாம் என சவுத் டைரோல் நுகர்வோர் பாதுகாப்பு மையம் எச்சரித்துள்ளது.
அவ்வாறு செய்வது தரவு திருட்டு, வைரஸ்கள் அல்லது நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கும். முறையான முதலாளிகள் தானியங்கி அழைப்புகள் அல்லது WhatsApp செய்திகள் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்குவதில்லை.
வேலை தேடுபவர்கள், வட்ஸ்அப்பில் உரையாட தொடங்கியவுடன் மோசடி செய்பவர்கள் அதிக ஊதியம் பெறும் ஒன்லைன் வேலைகளை வழங்கும் வேலை ஏஜென்சி போல தம்மை காட்டிக்கொள்கின்றனர்.
அதன் பின்னர், அவர்கள் போலி வேலை படிவங்களுக்கான இணைப்புகள் அதாவது Linkகளை அனுப்புகிறார்கள். இதுபோன்ற Linkகளை click செய்வதன் மூலம் போலி வர்த்தக தளங்களுக்கு பணம் பரிமாற்றப்படுகின்றது.
மோசடி செய்பவர்கள் உடனடியாக பணம் கேட்காததால், வேலை தேடுபவர்கள் முதலில் அவர்களை நம்பலாம், இது மோசடியை இன்னும் இலகுவாக்குகின்றது.
பாதுகாப்பாக இருக்க, WhatsApp மூலம் சந்தேகத்திற்கிடமான வேலை வாய்ப்புகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம். நீங்கள் அத்தகைய அழைப்பைப் பெற்றால், அதைப் புறக்கணிக்கவும், தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.