சுவிற்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஜார்க்கண்ட் முதல்வர்
முதன்முறையாக, ஜார்க்கண்ட் முதல்வர்(Jharkhand) ஹேமந்த் சோரன்(Hemant Soren) இந்த மாதம் சுவிஸ் ஸ்கை ரிசார்ட்(Swiss ski resort) நகரமான டாவோஸில்(Davos) நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின்(WEF) வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
மேலும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்த பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18-24 திகதிகளில் நடைபெறும் டாவோஸ் கூட்டத்திற்குப் பிறகு, ஹேமந்த் சோரன் ஆக்ஸ்போர்டு(Oxford) பல்கலைக்கழகத்தின் பிளாவட்னிக் அரசுப் பள்ளியில் ஒரு சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தி அதைத் தொடர்ந்து கேள்வி பதில் அமர்வில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருடன் இணைந்து மூன்று மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் ஐந்து முதல்வர்கள் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலமாகி 25 ஆண்டுகள் ஆவதை ஒட்டி இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது, மேலும் உலக பொருளாதார மன்றத்தில் முதன்முறையாக பங்கேற்பதை இது குறிக்கிறது.





