90 ஆண்டுகளில் முதல் முறையாக நியூசிலாந்திற்கு வருகை தந்துள்ள ஜப்பானிய போர்கப்பல்!

கிட்டத்தட்ட 90 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பானிய போர்க்கப்பல்கள் இன்று (08.08) நியூசிலாந்தின் தலைநகரில் நங்கூரமிட்டன.
500 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட இரண்டு கப்பல்கள் நியூசிலாந்து கடற்படைக் கப்பலான HMNZS கேன்டர்பரியுடன் வெலிங்டன் துறைமுகத்திற்குள் பயணித்தன.
மேலும் ஜப்பானின் இராணுவம் இந்த மாதம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளை உள்ளடக்கிய போர் பயிற்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில் இந்த கப்பலின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வெலிங்டன் வருகை ஒரு சம்பிரதாயமான வருகையாக இருந்தது, ஆனால் அமெரிக்காவை மட்டுமே ஒப்பந்த நட்பு நாடாகக் கொண்ட ஜப்பான், தொடர்ச்சியான பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்த அதிகளவில் முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)