ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்!

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் நான்காவது பெரிய பொருளாதாரத்தை புதிய அரசியல் நிச்சயமற்ற தன்மையில் ஆழ்த்தி, இன்று (07) அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
தனது ஆளும் கட்சியில் பிளவைத் தவிர்க்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானிய பிரதமர் இஷிபா உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதம் நடந்த தேர்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஏற்பட்ட வரலாற்று தோல்வியைத் தொடர்ந்து ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை இஷிபா மறுத்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த தோல்விகள் இஷிபாவின் கூட்டணி அதன் கொள்கை இலக்குகளை செயல்படுத்துவதை மேலும் கடினமாக்கியுள்ளன.