ஜப்பானில் உருளைக்கிழங்கு சிப்ஸால் மாணவர்களுக்கு நேர்ந்த கதி – மருத்துவமனையில் அனுமதி
ஜப்பானின் தலைநகர் தோக்கியோவில் உயர்நிலைப் பாடசாலையில் பயிலும் 14 மாணவர்கள் மிகக் காரமான உருளைக்கிழங்கு சிப்ஸை உட்கொண்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் 13 மாணவிகளும் ஒரு மாணவனும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மாணவர் அந்தக் கார உருளைக் கிழங்கு சிப்ஸைப் பாடசாலைக்குக் கொண்டுவந்ததாகத் தெரிகிறது.
அதை 30 மாணவர்கள் உட்கொண்டுள்ளனர். பிறகு சில மாணவர்களுக்கு வாந்தியும் வாய்ப்பகுதியில் கடுமையான வலியும் ஏற்பட்டன.
உருளைக்கிழங்கு சிப்ஸைத் தயாரித்த Isoyama Corp நிறுவனம், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டது.
Isoyama Corp நிறுவனத்தின் இணையத்தளத்தில் சிப்ஸை உண்ண விரும்புவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கும் குறைவானவர்கள் சாப்பிடக் கூடாத உருளைக் கிழங்கு சிப்ஸ் அது என்கிறது நிறுவனத்தின் இணையப்பக்கம்.
(Visited 4 times, 1 visits today)