இராணுவச் செலவை உயர்த்த ஜப்பான் எடுக்கவுள்ள நடவடிக்கை
ஜப்பான் அதன் பாதுகாப்பு செலவிற்காகக் கூடுதல் தொகையை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்காக 2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அதன் முக்கிய வரிகளை உயர்த்தவுள்ளது.
அது முன்னாள் பிரதமர் Fumio Kishida திட்டத்தின் தொடர்ச்சியாக அந்த மாற்றங்களைச் செய்ய எண்ணுகிறது.
2027ஆம் ஆண்டிற்குள் தற்காப்புச் செலவை இரட்டிப்பாக்க ஜப்பான் முனைகிறது.
வரிகளில் மாற்றம் செய்வதன் மூலம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜப்பானிய அரசிற்கு 1 டிரில்லியன் யென் கூடுதல் வருமானம் கிட்டும் என்று நம்பப்படுகிறது.
திட்டத்தைச் செயல்படுத்தக் கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
2022ஆம் அண்டு முதல் வரிகளை அதிகரிக்கும் அரசின் முயற்சிகளுக்குத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
(Visited 1 times, 1 visits today)