உக்ரேனிய அகதிகளுக்கு உதவ 1 பில்லியன் வழங்கும் ஜப்பான்!
உக்ரைனைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு அகதிகளை ஏற்றுக்கொள்வதற்காக ஒரு பில்லியன் வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நிதியமைச்சர் Shunichi Suzuki இந்த உதவித் தொகை சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி மூலம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜி7 நாடுகளின் நிதித் தலைவர்களின் மூன்று நாள் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்காக, டோக்கியோவின் வடக்கே உள்ள நிகாட்டாவை வந்தடைந்தபோது சுஸுகி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ரஷ்யா தனது படையெடுப்பிற்குப் பிறகு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதைத் தடுப்பது குறித்தும் G7 விவாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
(Visited 4 times, 1 visits today)