இலங்கை

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்ய ஜப்பான் உதவி: இலங்கை ஜனாதிபதி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு ஜப்பானிய தூதுவரின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதனை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்றுவரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கண்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

கண்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றதாகவும், தற்போது நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

“குட் ஷெட் பேருந்து நிலையம் போன்ற பெரும்பாலான திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடுகஸ்தோட்டை, பேராதனை, தென்னகும்புர ஆகிய இடங்களிலும் பேருந்து முனையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் பணத்தைக் கண்டுபிடித்து கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவோம்,” என்று அவர் கூறினார். என்றார்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்