அமெரிக்காவிடம் இருந்து 400 நீண்ட தூர ஏவுகணைகளை வாங்கும் ஜப்பான்
ஜப்பான் அதன் நட்பு நாடான அமெரிக்காவுடன் 400 நீண்ட தூர Tomahawk ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வளர்ந்து வரும் சீன இராணுவ செல்வாக்கு மற்றும் அணுஆயுத வட கொரியாவை எதிர்கொண்டுள்ள ஜப்பானிய அரசாங்கம், 2027 ஆம் ஆண்டிற்குள் நேட்டோ தரநிலையான GDP யில் இரண்டு சதவீதத்திற்கு அதன் பாதுகாப்பு செலவினங்களை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.
1,600-கிலோமீட்டர் (995-மைல்) வரம்பைக் கொண்ட இரண்டு வகையான டோமாஹாக்ஸுக்கு $2.35 பில்லியன் வரையிலான விற்பனை நவம்பர் மாதம் வாஷிங்டனால் அங்கீகரிக்கப்பட்டது.
“இந்த கையொப்பத்தின் முடிவு Tomahawk ஏவுகணைகளின் கொள்முதல் தொடங்குகிறது என டோக்கியோவில் ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் ஒரு பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“(பாதுகாப்பு) வரவுசெலவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம், நாங்கள் எங்கள் பாதுகாப்பு திறனை விரிவாக பலப்படுத்துவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஜப்பான் ஏப்ரல் முதல் அடுத்த நிதியாண்டில் $56 பில்லியன் மதிப்பிலான பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.