நிலவில் வெற்றிகரமாக கால்பதித்தது ஜப்பான்
சந்திரனை ஆய்வு செய்வதற்கான ஸ்மார்ட் லேண்டர் (SLIM) சந்திர மேற்பரப்பில் தரையிறங்கியதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) வெள்ளிக்கிழமை கூறியது.
“மூன் ஸ்னைப்பர்” என்றும் அழைக்கப்படும் SLIM மிகவும் துல்லியமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய 5 ஆவது நாடாக ஜப்பான் இடம்பிடித்தது.
இதற்குமுன்னர் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையம், Smart Lander for Investigating Moon என்ற திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், H-IIA ரொக்கெட் செப்டம்பர் மாதம் ஜப்பானின் தெற்கு தீவான தனேகாஷிமாவிலிருந்து லேண்டரை சுமந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.