ஏழாவது ஆண்டாக குறைந்தளவான பிறப்பு விகிதத்தை பதிவு செய்த ஜப்பான்!
கடந்த 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக ஜப்பானின் குறைந்த பிறப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் கருவுறுதல் விகிதம், குறைவடைந்து வருவதுடன், பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 1.2565 ஆகவும் பதிவாகியுள்ளது. இது கடந்த 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.
இந்நிலையில், அந்நாட்டின் பிரதமர் Fumio Kishida நாட்டின் சரியும் பிறப்பு விகிதத்தை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி குழந்தை பராமரிப்பு, பெற்றோருக்கு ஆதரவளிக்கும் பிற நடவடிக்கைகளுக்காக ஆண்டுக்கு 3.5 டிரில்லியன் யென்னை ஒதுக்கியுள்ளார்.
“இளைஞர்களின் எண்ணிக்கை 2030களில் வெகுவாகக் குறையத் தொடங்கும். அதுவரையிலான காலம் குழந்தை பிறப்பு குறைந்து வருவதை மாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுநோய் ஜப்பானின் மக்கள்தொகை சவால்களை அதிகப்படுத்தியுள்ளது, சமீபத்திய ஆண்டுகளில் குறைவான திருமணங்கள் குறைவான பிறப்புகளுக்கு பங்களிக்கின்றன மற்றும் அதிக இறப்புகளுக்கு கோவிட் -19 ஓரளவு காரணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.