ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு ; பிரதமர் தகைச்சியின் அதிரடி முடிவு
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி (Sanae Takaichi), எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற அவர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தனது புதிய திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த இடைத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
465 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவைக்கு நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், தகைச்சியின் தலைமைத்துவத்திற்கு ஒரு முக்கிய சோதனையாகக் கருதப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு குறித்த கவலைகள் மக்களிடையே நிலவி வரும் சூழலில், இந்தத் தேர்தல் முடிவு ஜப்பானின் எதிர்கால பாதுகாப்பு வியூகங்களைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





