ஜப்பான் சிவப்புக் கோட்டைத் தாண்டிச் செல்கிறது – சீனா எச்சரிக்கை!
தைவான் தொடர்பான ஜப்பானின் ஜனாதிபதி கூறிய கருத்துக்களை விமர்சித்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இன்று அதிகாரப்பூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் ஜப்பான் சிவப்புக் கோட்டைத் தாண்டிச் செல்வதாகவும், அதைத் தொடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) தைவான் விவகாரத்தில் இராணுவ ரீதியாகத் தலையிட முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“சீனா தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், இரத்தம் மற்றும் தியாகத்தால் பெறப்பட்ட சாதனைகளைப் பாதுகாக்கவும் உறுதியுடன் பதிலடி கொடுக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படும் தைவான் மீதான சீனாவின் தாக்குதலுக்கு ஜப்பான் எதிர்வினையாற்றும் என சானே தகைச்சி (Sanae Takaichi) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் இருநாடுகளின் அரசியல், கலாச்சாரம், பொருளாதார உறவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விடயத்தை தெளிவுப்படுத்த சீனா ஐ.நாவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
அந்த கடிதம் குறித்து பதிலளித்த ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் சீனாவின் கூற்றுக்களை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று நிராகரித்தது.
அத்துடன் அமைதிக்கான ஜப்பானின் உறுதிப்பாடு மாறவில்லை என்றும் கூறியுள்ளது.





