ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
																																		ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடம்பெயர்ந்தவர்களுக்கு ஜப்பான் ராணுவம் நிவாரணம் வழங்கி வருவதாகவும், தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஒசாகா நகரிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இஷிகாவா.
அங்கு ஒன்றரை மணி நேரத்தில் நிலநடுக்கங்கள் பதிவானதாக ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டது.
அவற்றுள் ஆகக் கடுமையானது 7.6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம். அதையடுத்து பல இடங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
(Visited 24 times, 1 visits today)
                                    
        



                        
                            
