ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

கடைசி நிமிடத்தில் அமெரிக்க பயணத்தை ரத்து செய்த ஜப்பான்

ஜப்பானின் வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ரியோசி அகாசாவா கடைசி நிமிடத்தில் அமெரிக்காவிற்கான தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

550 பில்லியன் டாலர் தொகுப்பை உறுதிப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வருமானப் பிரிப்பு போன்ற நிதி விவரங்களை முறைப்படுத்தவும் அகாசாவா அமெரிக்காவிற்கு செல்ல இருந்தார்.

அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் இந்த வாரம் ஜப்பானின் 550 பில்லியன் டாலர் முதலீடு குறித்த அறிவிப்பையும் தெரிவித்திருந்தார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் யோஷிமாசா ஹயாஷியின், “அமெரிக்க தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்படும்போது நிர்வாக மட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலீட்டு உறுதிமொழிக்கு ஈடாக, டோக்கியோவின் இறக்குமதிகள் மீதான வரிகளை 15 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்காவும் ஜப்பானும் ஒரு உடன்பாட்டை எட்டியிருந்தன.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி