ஜாம்பவான்கள் ரெக்கார்டை செய்த ஜெய்ஸ்வால்.. உலகிலேயே இந்த சாதனையை செய்த 5வது வீரர்
இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2024 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்து இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் மூலம் அவர் இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார்.
உலக அளவில் 23 வயது ஆகும் முன் டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் 1000 ரன்களை எடுத்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையையும் அவர் செய்து இருக்கிறார்.
இதற்கு முன் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இந்த சாதனையை செய்து உள்ளனர். தற்போது ஐந்தாவதாக ஜெய்ஸ்வால் இந்த சாதனையை செய்து இருக்கிறார்.
மேலும், இந்திய அளவில் 23 வயதாகும் டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் 1000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார்.
2024 ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதல் இடத்தில் இருக்கிறார்.
அவர் இதுவரை 1305 ரன்கள் எடுத்து இருக்கிறார். ஜெய்ஸ்வால் 1007 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் மோசமாக தடுமாறியது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது.
விராட் கோலி ஒரு ரன் எடுத்தும், ரோஹித் சர்மா ரன்னே எடுக்காமல் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்து இருக்கின்றனர்.