இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் – இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
புதிய அரசாங்கம் கடந்த வாரம் பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு வெளிவிவகார அமைச்சர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
ஜெய்சங்கருடன் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வருகைத்தந்துள்ளனர்.





