ஜெர்மனிக்கு செல்ல முற்பட்ட யாழ் இளைஞன் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ஜெர்மனிக்கு செல்ல முற்பட்ட இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போலி ஜெர்மனி விசாவை பயன்படுத்தி செல்ல முயற்சித்த போது அவர் கைது யெ்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை நிர்ணய கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், புதுடில்லி சென்று பின்னர் அங்கிருந்து, மற்றுமொரு விமானத்தில் ஜெர்மனி நோக்கி பயணிக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் ஜேர்மனி நாட்டுக்கான விசா போலியானது என தெரியவந்துள்ளது.
(Visited 24 times, 1 visits today)