யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு: பின்னணி என்ன?
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது, வடக்கில் மீண்டும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியா என இலங்கை தமிழரசுக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் Gnanamuthu Srinesan இவ்வாறு வினா தொடுத்தார்.
“யாழ்.பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது வடக்கு மாகாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும்.
மாணவர்களின் செயற்பாடுகளில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் அவற்றுக்கான காரணங்களை கண்டறிந்து பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இது விடயத்தில் அரசாங்கம் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
மாணவர்கள் மத்தியில் அச்சமான சூழல் ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது.” எனவும் ஞானமுத்து ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.





