போலி விசாவிற்காக 7,000 யூரோக்கள் செலுத்திய யாழ்ப்பாண நபர்!!! விமான நிலையத்தில் கைது
இலங்கை கடவுச்சீட்டில் பொருத்தப்பட்ட போலி போலந்து வீசாவைப் பெறுவதற்காக 7,000 யூரோவை செலுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர், நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
திங்கட்கிழமை மாலை கத்தாரின் தோஹா நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 217 இல் பயணிக்கவிருந்தபோது, குறித்த நபர் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பயணியிடம் விசாரித்தபோது, போலி விசாவிற்கு 7 ஆயிரம் யூரோ கொடுத்ததாக கூறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போலி விசாவைப் பெறுவதற்காக ஜெர்மனியில் உள்ள ஒருவருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பயணி ஒருவர் போலியான போலிந்து விசா மூலம் தனது கடவுச்சீட்டை உள்ளூர் முகவரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.
அவர் தோஹாவுக்கு விமானத்தில் ஏறியதாகவும், பின்னர் போலந்தின் வார்சாவுக்கு இணைக்கும் விமானத்தில் செல்வதாகவும் சந்தேகிக்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிரிவிடம் சந்தேநகபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.