யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திரதின கொண்டாட்டங்கள்
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று(15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
(Visited 14 times, 1 visits today)





