பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட யாழ் மாவட்ட எம்.பி அர்ச்சுனா
யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பாராளுமன்ற அமர்வுக்காக கொழும்பு நோக்கி அர்ச்சுனா பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசேட அதிதிகளுக்கான விளக்குகளை பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு விளைவிறகும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக அவரது வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.
இதன்போது, ஆவணங்களை வழங்க மறுத்து, போக்குவரத்து கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 2 times, 2 visits today)