யாழ். பிரதி முதல்வர் சீனா விஜயம்
டிஜிட்டல் பொருளாதார பரிபாலனம் மற்றும் தலைமைத்துவப் பயிற்சி தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி முதல்வர் இம்மானுவல் தயாளன் சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை இந்த விசேட வேலைத்திட்டம் சீனாவில் நடைபெறவுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி அபிவிருத்தி மற்றும் உள்ளூராட்சி நிர்வாகங்களை நவீனப்படுத்துவது குறித்து ஆராயப்படவுள்ள இந்த நிகழ்வில், இலங்கையிலிருந்து முதல்வர்கள் மற்றும் ஆணையாளர்கள் உள்ளிட்ட 19 பேர் பங்கேற்கவுள்ளனர்.
அரசின் முன்னுரிமைத் திட்டங்களுக்கு இணங்க இந்த விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





