இலங்கை : யாழ் – சுன்னாகம் பகுதியில் அராஜக செயலில் ஈடுபட்ட பொலிஸார் பணியிடை நீக்கம்!
வீதி விபத்தின் பின்னர் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒருவர் வாகனத்தை விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
அந்த நபரைக் கைது செய்யச் செல்லும் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதன்படி விசாரணையின் பின்னர் இந்த 04 பொலிஸார் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 58 times, 1 visits today)





