யாழ்ப்பாண சிறுவன் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (26) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 16 வயதுடைய சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று (25) காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து இன்று தேடுதல் நடத்திய போது அருகில் இருந்த நீர் நிலை ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டானா அல்லது விபத்தா? என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 32 times, 1 visits today)