வெளியான க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறு: யாழ். வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி மாணவர்களின் சாதனை
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள் 9ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.
8 ஏ பெறுபேற்றை 59 பேரும், 7 ஏ பெறுபேற்றை 22 பேரும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
வெளியான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா ஆனந்தசயனன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





