யாழ். திருநெல்வேலியில் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி!
 
																																		யாழில் விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவ ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் இன்று முற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி தனது பாட்டியுடன் இங்கு வந்ததாகவும் மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு இச் சம்பவம் கொலை என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
