இலங்கை ஜா-எல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ள பொலிஸார்

இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த அநாமதேய அழைப்பின் அடிப்படையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் ஜா-எல உஸ்வெட்டகேயாவ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பமுனுகம காவற்துறை அதிகாரிகள் சடலம் கண்டெடுக்கப்பட்ட உஸ்வெட்டகேயாவ மோர்கன்வத்தை கடற்கரையை பார்வையிட்டனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலம் காணப்பட்டதுடன், அருகில் இருந்த T-56 துப்பாக்கியிலிருந்து 09 வெற்று தோட்டாக்கள் மற்றும் உயிருள்ள தோட்டா ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இக்கொலை நேற்றிரவு (பிப்ரவரி 20) இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் அடையாளங்களை பொலிசார் இன்னும் கண்டறியவில்லை.
கொலைச் சம்பவம் தொடர்பில் பமுங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.