இத்தாலியின் பலேர்மோ விமான நிலையம் மூடப்பட்டது

இத்தாலியை பாதித்துள்ள அதிக வெப்பநிலையுடன் காட்டுத் தீ பரவி வருவதால் சிசிலி தீவில் உள்ள பலேர்மோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நாட்களில் அந்த பகுதியில் வெப்பநிலை 47.6 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது.
காட்டுத் தீ காரணமாக ரயில் போக்குவரத்தும், தரை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக இத்தாலியில் உள்ள 16 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலி தவிர்ந்து ஐரோப்பாவின் பல நாடுகளில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)