இத்தாலியின் கடற்பறவைகளின் படையெடுப்பால் மூடப்பட்ட விமான நிலையம்
இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள மார்க்கோ போலோ விமான நிலையம் திடீரென மூடப்பட்டுள்ளது.
கடற்பறவைகளின் படையெடுப்பால் இந்த நடவடிக்கை எடுக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வழக்கத்தைவிட அதிகமான கடற்பறவைகள் விமான ஓடுபாதையைச் சூழ்ந்திருந்தது. இதனால் இந்த விமான நிலையத்தைச் சற்று நேரம் மூட நேர்ந்தது.
அதனால், விமானப் பயணங்கள் தாமதமாயின அல்லது விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
கடற்பறவைகளைத் துரத்த வல்லூறு வளர்ப்பவர், ஒலிபெருக்கி எனப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியதாக விமான நிலைய நிர்வாகம் கூறியது. அதே சமயம் கடற்பறவைகளின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டதாக அது குறிப்பிட்டது.
ஓடுபாதையில் சுமார் 200 கடற்பறவைகள் இருந்ததாக உள்ளூர் ஊடகம் Zaia தெரிவித்தது. வெனிஸ் நகரில், கடற்பறவைகள் மிகவும் பிரபலம். அண்மை ஆண்டுகளில், அவற்றின் தொந்தரவு அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக, பயணிகளிடமிருந்து உணவைப் பறிப்பதில் அவை மும்முரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.