நேரடி முதல்வர் தேர்வுக்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள இத்தாலிய செனட்
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்று நாட்டின் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் அரசாங்க மசோதாவுக்கு இத்தாலிய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவின் உறுதியான ஆதரவாளரான பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கருத்துத் தெரிவிக்கையில், “ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான முதல் படி இது, நமது நிறுவனங்களுக்கு ஸ்திரத்தன்மையைக் கொடுக்கும், அரண்மனை விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மற்றும் குடிமக்களுக்கு யார் ஆட்சி செய்வது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மீண்டும் அவர்களுக்கு வழங்கும் என்று தெரிவித்தார்.
செனட்டில் எதிர்க்கட்சியான பசுமை மற்றும் இடது கூட்டணி (AVS), ஐந்து நட்சத்திர இயக்கம் (M5S), மேலும் ஐரோப்பா மற்றும் ஜனநாயகக் கட்சி (PD) ஆகிய கட்சிகள் இந்த மசோதாவை விவாதித்துக் கொண்டிருந்த போது, தேர்தல் மசோதாக்கள் உள்ளிட்ட அரசியலமைப்புத் திருத்தங்களை எதிர்த்து ரோம் தெருக்களில் இறங்கின.