இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்: இலங்கைத் தமிழ் அரசு கட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசு கட்சி வேட்பாளரை நியமிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சுமந்திரனின் கூற்றுப்படி, கட்சி இன்னும் முக்கிய வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்
எவ்வாறாயினும், எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பலர் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளனர் எனறார்.





