செய்தி

காட்டிக்கொடுத்தவர் பார்த்திபன் தான்! பயில்வான் கிளப்பிய பகீர் தகவல்!!

நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ‘யோக்கியன்’ படத்தின் ஆடியோ, மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பொன்னியின் செல்வன் படம் குறித்து பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் ‘யோக்கியன்’.

ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி, சாய் பிரபா மீனா என்பவர் இயக்கி யுள்ளார்.

சார்பட்டா படம் தியேட்டரில் வந்திருந்தால் வெட்டு குத்துதான் ...

இந்த படத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவருடன் தேவிகிருபா, சாம்ஸ், ஆர்த்தி சுரேஷ், கவிதா,குஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ , டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

Bailwaan Tamil Movie Review - Only Kollywood

தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு சங்க தலைவர் ஆர்.கே.அன்பு செல்வன், இயக்குனர்கள் லியாகத் அலிகான், செந்தில் நாதன், நடிகர் பயில்வான் ரங்கநாதன், நடிகை அக்ஷயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சர்ச்சை நடிகரான பயில்வான் ரங்கநாதன், “ஜெய் ஆகாஷ் நடித்திருக்கும் யோக்கியன் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

See the source image

மேலும் சினிமாவை பொறுத்தவரை மற்ற மாநில சினிமாத்துறை நன்றாக இருக்கிறது,தமிழ் சினிமா துறை அப்படி இல்லை என்று கூறினார்.

தயாரிப்பாளர் சங்கங்கள், நடிகர் சங்கம் என எந்த சங்கமும் தயாரிப்பாளர்களுக்கு உதவுது இல்லை என்ற சர்ச்சை தற்போது சினிமாவில் நிலவுகிறது என்றார்.

மேலும் என் படத்தை காப்பி அடித்துவிட்டார்கள் என்று பிரச்சனையை கிளப்புகிறார்கள் என்றார்.

Tamil Supporting Actor Bayilvan Ranganathan | NETTV4U
தொடர்ந்து பேசிய இவர் தமிழ் சினிமா ஒன்றாக இல்லை பிரிந்து கிடக்கிறது .

ஒரு படம் ஓடினால் அவனே காட்டிக்கொடுக்கிறான். பார்த்திபன் சொல்லித்தான் பொன்னியின் செல்வனுக்கு இன்கம் டேக்ஸ் ரெய்டு வந்தது என அதிர்ச்சித்தகவல் ஒன்றைத் தெரிவித்தார்.

படம் ஓடினால் இன்கம்டேக்ஸ் வந்துவிடுகிறது, ஓடாவிட்டால் வட்டிக்காரன் வந்துவிடுகிறான் எனவும் தெரிவித்தார்.

திரையுலகினர் ஒட்டுமொத்தமாக சென்று சிறுபட்ஜெட் படங்களுக்கு வரிவிலக்கு கொடுங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்டால் நிச்சயம் தருவார்.

ஹரி நாடருன் எனக்கு தொடர்பா.? பிரபலத்தை கிழித்தெறிந்த விஜயலட்சுமி ...

இதை தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.

இவர் பேசியதில் அந்த பார்த்திபன் மேட்டர் தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

எந்த ஒரு சர்ச்சை என்றாலும், வரித்து கட்டிக்கொண்டு முதல் ஆளாக சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுக்கும் பார்த்திபன் இந்த விஷயத்திற்கும் பதிலடி கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!