உலகம் செய்தி

சீனாவின் நிர்வாகம் ஆழ்ந்த நெருக்கடியில் இருப்பதாக தகவல்

சீனாவின் உள் நிர்வாகம் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும், பல்வேறு சமூகப் பிரிவினரிடமிருந்து அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான மக்களின் குரல்கள் அதிகரித்துள்ளதாகவும், அரசாங்கத்தின் பயனற்ற கொள்கைகளுக்கு அவர்களின் எதிர்ப்பு வலுத்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுப் போராட்டங்களுக்கு எதிர்வினை மிகவும் கடுமையாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எந்த வகையான எதிர்ப்பையும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கும் வேலைத்திட்டத்தை நாட்டில் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், மக்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, சீனாவின் பல நகரங்களில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைக் கருத்திற்கொண்டு, சீனாவின் அரசியல் நிலைமை மிகவும் ஸ்திரமற்றதாகவும் மோதல்கள் நிறைந்ததாகவும் காணப்படுவதாகவும், அதற்கு சர்வதேச சமூகத்தின் உன்னிப்பான அவதானம் அவசியம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் பாதுகாப்புப் படையினருக்கும் மக்களுக்கும் இடையிலான மோதல் சீனா முழுவதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு ஆபத்தான முறையில் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் நிதித்துறையில் ஏற்படும் முறிவுகள் காரணமாகவே இந்த மோதல்கள் அடிக்கடி எழுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்தின் தலையீடு மிக அதிகமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலவந்தமான காணி சுவீகரிப்புகளில் இவ்வாறான நிலைமைகள் அடிக்கடி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து வருவதாக கூறப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!