எவரெஸ்ட் சிகரத்தை விடவும் 3 மடங்கு பெரிய வால்நட்சத்திரம் வெடித்து சிதறியதாக தகவல்
அரிய வானியல் நிகழ்வாக வால்நட்சத்திரம் ஒன்று வெடித்து சிதறியதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2வது முறையாக இந்த வால்நட்சத்திரம் வெடித்து சிதறியுள்ளதென தெரிவிக்கப்படகின்றது.
விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ஏராளமான வால்நட்சத்திரங்களில் சில, அவ்வப்போது பூமியின் மிக அருகில் வந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் எவரெஸ்ட் சிகரத்தை காட்டிலும் 3 மடங்கு பெரிய அளவிலான கொம்பு வைத்த வால்நட்சத்திரம் ஒன்று தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 4 மாதத்தில் 2வது முறையாக இந்த வால் நட்சத்திரம் வெடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
12பி-பான்ஸ் ப்ரோக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த வால்நட்சத்திரம், சுமார் 30 கிலோமீட்டர் விட்டத்தில் பிரம்மாண்டமாக உள்ள இந்த வால்நட்சத்திரம் கடந்த அக்டோபர் 5ம் தேதி வெடித்துள்ளது.
பிரிட்டிஷ் வானவியல் ஆய்வு மையம் இந்த வால்நட்சத்திரத்தை கடந்த பல மாதங்களாக தொடர்ந்து கண்காணித்து வந்தது. பிரகாசமான வெளிச்சத்துடன் கண்டறியப்பட்ட இந்த வால்நட்சத்திரம் 2024ஆம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் வரும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இருப்பினும் இந்த வால்நட்சத்திரம் பூமியில் விழுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் மீண்டும் சூரியக் குடும்பத்திற்கு திரும்ப இந்த வால் நட்சத்திரத்திற்கு 2095ம் ஆண்டு ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 20ம் தேதி இந்த வால்நட்சத்திரம் 69 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெடித்து சிதறியது.
வால் நட்சத்திரங்கள், ஐஸ்கட்டிகள் போன்ற பொருட்களால் ஆன வானில் மிதக்கும் சிறிய பொருட்களாகும். சூரியன் போன்ற வெப்பமான கிரகங்களின் அருகில் வரும் போது, அதில் உள்ள கனிமங்கள் எரிந்து, வால், கொம்பு போன்ற தோற்றங்களை பெரும். பெரும்பாலான வால் நட்சத்திரங்கள், பூமியின் வளிமண்டலத்தைவிட்டு விலகி சென்றுவிடும் நிலையில், பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தால், எரிந்து சாம்பலாகிவிடும் என்பதால் ஆபத்தை ஏற்படுத்துவது இல்லை.