வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது என உறுதி!
																																		2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது. இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2026 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
குறித்த வரவு- செலவுத் திட்டம் எவ்வாறு அமையும் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது இன்று கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“ வரி அதிகரிப்பு இடம்பெறாது என்பதை ஜனாதிபதி அறிவித்துவிட்டார். இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அது எவ்வாறு இடம்பெறும் என்பது பற்றி ஜனாதிபதி தமது உரையில் தெளிவுபடுத்துவார். உற்பத்தி பொருளாதாரம் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
        



                        
                            
