பாகிஸ்தானில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 11 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அறிவிப்பு!

கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குறைந்தது 11 பேரைத் தேடும் பணியை வடக்கு பாகிஸ்தானில் மீட்புப் பணியாளர்கள் கைவிட்டுள்ளனர்.
காணாமல்போயிருந்த 11 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் சிலாஸ் நகரத்தில் கொட்டி தீர்த்த மழை காரணமாக 18 பேர் மாயமாகியிருந்தனர். அவர்களில் 07 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)