முடிவுக்கு வந்த ஈஸ்வரனின் அரசியல் வாழ்க்கை – சிங்கப்பூர் பிரதமர் வெளியிட்ட தகவல்

சிங்கப்பூரில் அரசியல் பாதிப்பு என்னவாக இருந்தாலும் அரசாங்கம் சரியானதை செய்யும் என பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதான வழக்குக் குறித்து வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் எது சரியானதோ அதையே அரசாங்கம் செய்யும். அரசியல் பாதிப்பு, ஒரு சகாவும் நண்பரும் சிறைக்குச் செல்லும்போது ஏற்படும் தனிப்பட்ட வேதனை ஆகியவை பொருட்டல்ல.
ஈஸ்வரனின் அரசியல் வாழ்க்கை முடிவடைந்த விதம் குறித்து ஏமாற்றமும் கவலையும் அடைகிறேன். ஈஸ்வரனின் பல்வேறு பங்களிப்புகள் உள்ளது.
அரசாங்கமும் அரசியலும் எப்போதுமே நேர்மையாகவும் ஊழலற்ற வகையிலும் இருக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 17 times, 1 visits today)