இஸ்ரேலின் போர் அமைச்சரவை கலைக்கப்பட்டது

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆறு உறுப்பினர்களை கொண்ட “போர் அமைச்சரவை”யை கலைக்க முடிவு செய்துள்ளார்.
அந்த அமைச்சரவையில் பலமாக இருந்த பென்னி காண்ட்ஸ் மற்றும் அவரது நண்பர் காடி ஐசென்கோட் ஆகியோர் வெளியேற முடிவு செய்ததை அடுத்து இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் பின்னர் சிறிய மன்றம் ஒன்றின் மூலம் காஸா போர் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசாவில் நடந்து வரும் போர் மூலோபாயமானது அல்ல என்ற அறிக்கையின் காரணமாக பென்னி காண்ட்ஸ் 8 நாட்களுக்கு முன்பு இஸ்ரேலின் போர் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.
எவ்வாறாயினும், போர் அமைச்சரவை கலைக்கப்பட்டதன் மூலம் இராணுவத்தின் கட்டளைச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
(Visited 33 times, 1 visits today)