இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு தலைவர் பதவி நீக்கம்

கத்தார் மீதான சமீபத்திய தாக்குதல் மற்றும் காசா நகரத்தை ஆக்கிரமிப்பதற்கான தாக்குதல் உள்ளிட்ட கொள்கை முடிவுகள் குறித்த கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாச்சி ஹனெக்பி (Tzachi Hanegbi) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
“தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரை நியமிக்கும் தனது விருப்பத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எனக்குத் தெரிவித்தார். இதன் அடிப்படையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக எனது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.” என்று சாச்சி ஹனெக்பி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது சேவைக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்ததாகவும் எதிர்கால முயற்சிகளில் வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்தியதாகவும் சாச்சி ஹனெக்பி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாச்சி ஹனெக்பிக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் கில் ரீச் (Gil Reich) நிறுவனத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.