மத்திய கிழக்கு

கிழக்கு,தெற்கு லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்; 12 பேர் பலி

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் உள்ள நகரங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!