காசாவில் போரை விரிவுப்படுத்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவில் போரை விரிவுப்படுத்துவதற்கான செயல்பாட்டுத் திட்டத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் காசாவின் சில பகுதிகளை ஆக்கிரமிப்பதும், பாலஸ்தீனியர்களை காசாவின் தெற்கே “நகர்த்துவதும்” அடங்கும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் “சாத்தியத்தையும்” இது அங்கீகரிக்கிறது.
(Visited 1 times, 1 visits today)