இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம் – காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் காஸா மருத்துவமனைகள்

இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தவர்களால் காஸா மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காசாவில் உள்ள மருத்துவமனைகள் பரபரப்பாகியுள்ளது.
காசாவின் நாசர் மற்றும் அல் ஷிஃபா மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காசா பகுதியில் உள்ள 36 மருத்துவமனைகளில் 19 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மொத்த மருத்துவமனைகளில் 94 சதவீத மருத்துவமனைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)