சிரியாவில் இஸ்ரேல் அட்டகாசம் – அமைதியை நிலைநாட்டும் தீவிர முயற்சியில் அமெரிக்கா

சிரியாவில் வன்முறைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு அமைதியை நிலைநாட்டும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அண்மையில், தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அழைப்பை ஏற்று, தென் பகுதியிலிருந்து ராணுவத்தை பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக சிரியாவின் தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும், சண்டைநிறுத்த ஒப்பந்தத்திற்கு கடைப்பிடிக்கும் அனைத்து தரப்புகளும் தங்கள் பங்கை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பாகப் பேசுவதற்காக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் ஒரு அவசர சந்திப்பை நடத்த வேண்டும் என சிரியா கேட்டுள்ளது. இந்த சந்திப்பு இன்று பின்னேரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.