நெதர்லாந்தில் தாக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் – கடும் கோபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றில் குழப்ப நிலை ஏற்பட்டது.
இதில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனை “யூத மதத்துக்கு மீதான மிகப்பெரிய தாக்குதல் ”என நெதர்லாந்து பிரதமர் Dick Schoof தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கையில், “வரலாற்றில் மிகவும் அவமானகரமான மணிநேரங்கள் அவை. மிகவும் கடுமையான கண்டனங்கள்” என தெரிவித்தார்.
இந்த தாக்குதலை அடுத்து 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 20 times, 1 visits today)