இஸ்ரேலின் ஆங்கில மொழி அரசாங்க செய்தி தொடர்பாளர் இடைநீக்கம்!
இஸ்ரேலின் ஆங்கில மொழி அரசாங்க செய்தி தொடர்பாளர் எய்லோன் லெவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி, சமூக ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இங்கிலாந்து அரசாங்கத்துடனான சர்ச்சையைத் தொடர்ந்து அரசாங்கத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் Lord Cameron உடனான சமீபத்திய ஒன்லைன் தகராறுடன் அவர் தொடர்புப்பட்டிருந்தார்.
அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் பத்திரிகைக்கு உறுதி செய்துள்ளது. எப்படியிருப்பினும் இதற்கான காரணத்தை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் இதுவரையில் தெரிவிக்கவில்லை.
ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக லெவி இங்கிலாந்து ஊடகங்களில் அனைத்திலும் தவறாமல் தோன்றினார்.
அத்துடன் தனது இடைநீக்கம் குறித்து லெவி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.