பிரித்தானியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலிய பிரதமர்
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரித்து “பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக” இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மூன்று நாடுகளுக்கும் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீங்கள் பயங்கரவாதத்திற்கு மகத்தான பரிசை வழங்குகிறீர்கள். மேலும் ஜோர்டான் நதிக்கு மேற்கே எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது,” என்று பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா அறிவித்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேல் பிரதமரின் எச்சரிக்கை வந்துள்ளது.





