ஹமாஸ் தலைவர் முகமது சின்வாரை கொன்றுவிட்டதாக அறிவித்த இஸ்ரேல் பிரதமர்
ஹமாஸ் தலைவர் முகமது சின்வாரை கொன்றுவிட்டோம் என இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நீண்டுகொண்டே செல்கிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் தலைவராக இருந்த யஹ்யா சின்வார் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டார்.
அதை தொடர்ந்து ஹமாஸின் தலைவராக யஹ்யா சகோதரரும், ஹமாஸ் இயக்கத்தின் படை தளபதிகளில் ஒருவருமான முகமது சின்வார் உயர்த்தப்பட்டார்.
தற்போது அவரையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். இது பற்றி ஹமாஸ் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த கொலையுடன் பாலஸ்தீனம்-இஸ்ரேல் போர் முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.





